spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்..... நடிகர் சித்திக் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்….. நடிகர் சித்திக் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

-

- Advertisement -

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் நடிகர் சித்திக் கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஒரு வாரத்துக்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்.நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்..... நடிகர் சித்திக் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நடிகர் சித்திக் மீது கேரளா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகர் சித்திக் தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு நடிகர் சித்திக் ஒத்துழைக்க மறுக்கிறார். கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. அவருடைய facebook கணக்கை அவர் ரத்து செய்துள்ளார். மொபைல் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய மறுக்கிறார் என்று புகார் கூறப்பட்டது.நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்..... நடிகர் சித்திக் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

சித்திக் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கடந்த2016 ஆம் ஆண்டு மொபைல் போன், லேப்டாப் கேட்டால் இப்போது எப்படி வழங்க முடியும்? குறிப்பிட்ட நடிகையை ஒரே ஒரு முறை பிரிவியூ தியேட்டரில் மட்டுமே சந்தித்ததாக தெரிவித்தார். பின்னர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேவேளையில் நடிகர் சித்திக் கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீட்டித்தது உச்சநீதிமன்றம்.

MUST READ