spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரூ.1.21 கோடி பண மோசடி வழக்கு: பாஜக மாநில நிர்வாகி கைது!

ரூ.1.21 கோடி பண மோசடி வழக்கு: பாஜக மாநில நிர்வாகி கைது!

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடியே 21 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாலகுமாரன். இவரது மகன் வழக்கறிஞர பாஸ்கர் (36). இவர்களிடம் வயலூர் பகுதியை சேர்ந்த பாஜக  மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் (37) என்பவர் நிலம் வாங்கி தருவதாக ரூ.44 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் தனது பெட்ரோல் பாங்கை விரிவுப்படுத்துவதற்காக பாலகுமாரனிடம் இருந்து ரூ.30 லட்சம் மற்றும் ரூ.47 லட்சம் என மூன்று தவணைகளில் ரூ.1 கோடியே 21 லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால் ராஜ்குமார், நிலம் வாங்கி தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டபோது, தான் பாஜகவில் மாநில பொறுப்பில் உள்ளதாகவும், தனக்கு மத்திய, மாநில அளவில் காவல்துறையில் செல்வாக்கு இருப்பதாக கூறி பணத்தை திருப்பி தர முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், பாலகுமாரன். இவரது மகன் வழக்கறிஞர பாஸ்கர் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பாலகுமாரன். இவரது மகன் வழக்கறிஞர பாஸ்கர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகி ராஜ்குமாரை கைது செய்தனர்.

MUST READ