

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் விளைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளது. வரத்து குறைவு காரணமாக ஒரு வாரமாக விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று மொத்த விற்பனையில் கிலோ 200 ரூபாய்க்கும் சில்லறை விற்பனை கடைகளில் 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே வாரத்தில் 150 ரூபாய் விலை உயர்வு. கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வரத்து குறைவு காரணமாக ஒரே வாரத்தில் 150 ரூபாய் அதிகரித்து இன்று 200 ரூபாய்க்கு விற்பனை.
கடந்த வாரம் கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சீசன் முடிந்துள்ள நிலையில், பனிப்பொழிவினால் வரத்து குறைந்துள்ள நிலையில் விலை உயர்ந்து வருவதாகவும் அடுத்த சில நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தகவல். வெங்காயம்,பூண்டு விலையில் இன்று மாற்றமில்லை, வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கும், பூண்டு கிலோ 420 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


