இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் வலம் வரும் டிரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராவார். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சொர்க்கவாசல் படம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது ஆர் ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் தான் சொர்க்கவாசல். திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் முழுவதும் ஜெயிலில் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (நவம்பர் 23) சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய லோகேஷ் கனகராஜிடம் கைதி 2 மற்றும் சொர்க்க வாசல் ஆகிய இரண்டு படங்களிலும் ஜெயில் கனெக்சன் இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ், “நான் சொர்க்கவாசல் படத்தை இனி தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் கைதி 2 படத்தில் சில ஜெயில் போர்ஷன்களை வைத்திருக்கிறேன். எனவே சொர்க்க வாசல் படத்தின் அடிப்படையில் அந்த போர்ஷன்களை மாற்றி அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -