spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇன்று மெகா ஐபிஎல் ஏலம்..!! முக்கிய பங்கு வகிக்கப்போகும் RTM முறை..

இன்று மெகா ஐபிஎல் ஏலம்..!! முக்கிய பங்கு வகிக்கப்போகும் RTM முறை..

-

- Advertisement -

இன்று மெகா ஐபிஎல் ஏலம்..!! முக்கிய பங்கு வகிக்கப்போகும் RTM முறை..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 18வது ஐபிஎல் மெகா ஏலம் சவுதியின் ஜெட்டா நகரில் இன்று மதியம் இந்திய நேரப்படி 3:30 மணிக்கு தொடங்குகிறது.

10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையொட்டி அணியில் வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது போன்றவை நடைபெற்றன. இந்நிலையில் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ளாபாடி அல்- ஜோஹர் அரங்கில் இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி சரியாக மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்குறது.

we-r-hiring

இந்த முறை ஏலத்தில் பங்கு பெறுவதற்காக 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 577 வீரர்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டு ஏலத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். ஐபிஎல் ஏலம் முழுவதுமாக தனியார் தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா செயலி மூலம் பார்க்கலாம் நேரலையில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் ஏலத்தொகையின் விபரம் :

மும்பை இந்தியன்ஸ் – ரூ. 45 கோடி
சென்னை சூப்பர் கிங்க்ஸ் – ரூ. 55 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ. 45 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ் – ரூ. 73 கோடி
குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 69 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ. 51 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ. 69 கோடி
பஞ்சாப் கிங்ஸ் – ரூ.110.5 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ. 41 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ. 83 கோடி.

ஐபிஎல் ஏலம்

ஒவ்வொரு அணியிடமும் மீதமுள்ள RTM கார்டுகள் :

ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு அணிக்கும் 6 RTM(Right to match card) கார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே மொத்தமாக 46 ஆர்டிஎம்கள் அனைத்து அணிகளாலும் பயன்படுத்தப்பட்டுவிட்டன. மீதமுள்ள 14 ஆர்டிஎம்களில் , பஞ்சாப் – 4; ஆர்சிபி- 3; டெல்லி – 2; மும்பை, ஹைதராபாத், குஜராத், லக்னோ, சென்னை ஆகிய அனிகள் தலா 1 RTM கார்டுகளை கொண்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானிடம் எந்த ஆர்டிஎம் கார்டும் இல்லை.

Image

RTM பயன்படுத்தி என்ன செய்யலாம்?

ஒரு அணி தங்களது பழைய வீரர்களை மற்ற அணிகள் ஏலத்தில் எடுத்தாலும், RTM(Right to match card) கார்டை பயன்படுத்தி தங்கள் அணியிலேயே தக்க வைக்க முடியும். உதாரணமாக கடந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆடிய சிராஜ்-ஐ ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தால், RTM முறையை பயன்படுத்தி ஆர்.சி.பியால் சிராஜை மீண்டும் தங்கள் அணியிலேயே தக்க வைக்க முடியும். அதேநேரம் சிராஜ் விலையை ஏலத்தில் எடுக்கும் பஞ்சாப் ரூ.18 கோடியில் இருந்து ரூ.21 கோடியாக உயர்த்தினால், ஆர்சிபி அணி ரூ.21 கோடியை செலுத்தி அவரை வாங்கிக்கொள்ளலாம். இல்லையெனில் சிராஜ் பஞ்சாப் அணிக்காக விளையாடுவார். ஆகையால் இன்றைய ஐபிஎல் ஏலத்தில் RTM முறை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ