spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇனி செட் டாப் பாக்ஸே தேவையில்லை: புதிய உத்தியுடன் களமிறங்கும் பிஎஸ்என்எல்

இனி செட் டாப் பாக்ஸே தேவையில்லை: புதிய உத்தியுடன் களமிறங்கும் பிஎஸ்என்எல்

-

- Advertisement -

பிஎஸ்என்எல் செட் டாப் பாக்ஸ் இல்லாமலேயே டிவி சேனல்களைப் பார்க்க ஒரு புதிய உத்தியை உருவாக்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஐபிடிவி சேவை வழங்குநரான ஸ்கைப்ரோ நிறுவனத்துடன் உடன் கைகோர்த்துள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தொலைக்காட்சி, இணைய அனுபவம் வழங்கப்படும். ஐபிடிவி சேவையின் உதவியுடன் அதிவேக பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும்.

we-r-hiring

ஸ்மார்ட் டிவியிலும் இந்தச் சேவையைப் பெறப் போகிறீர்கள். இந்த சேவை 500 HD/SD/Live சேனல்களை வழங்குகிறது. தவிர, 20க்கும் மேற்பட்ட ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகலும் கொடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் நெட்வொர்க்கிலும் செயல்படுகிறது. மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளும் இதில் கிடைக்கும். அதாவது இது உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

பிஎஸ்என்எல் சார்பில், சிஜிஎம் பஞ்சாப் சர்க்கிள் சார்பில், ‘நவம்பர் 28ல், புதிய இன்டர்நெட் டிவி சேவையை, சிஎம்டி ராபர்ட் ரவி துவக்கி வைத்தார். ஐபிடிவி இயங்குதளத்திற்கான அணுகலும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை பிரபலமான சேனல்களுக்கு அணுகலை வழங்குகிறது, இதில் கலர்ஸ், ஜீ ஸ்டார் மற்றும் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் அடங்கும். இதற்கு செட் டாப் பாக்ஸ் எதுவும் தேவையில்லை.

சோதனைக்குப் பிறகு சண்டிகரில் தொடங்கப்படுகிறது. ஆரம்பத்தில் 8 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இதில் இணைந்துள்ளனர். சேவையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதே பிஎஸ்என்எல் திட்டம்.

 

MUST READ