தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் 90 காலகட்டங்களில் துணை நடிகராக நடித்து வந்த நிலையில் கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் ஆகிய படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.
கடைசியாக இவர் கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர், கங்குவா ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. அடுத்தது இவர் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் தங்களின் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளார்.
இந்த தகவல் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து நடிகை சங்கீதா விலகியதனால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ரெடின் கிங்ஸ்லி 46 வயது வரையிலும் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து 47வது வயதில் தந்தையாகப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் அவருக்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -


