spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எந்த அடிப்படையில் நாங்கள் பிரிவினைவாதிகள் ? - சீமான்

எந்த அடிப்படையில் நாங்கள் பிரிவினைவாதிகள் ? – சீமான்

-

- Advertisement -

எந்த அடிப்படையில் நாங்கள் பிரிவினைவாதிகள் என்பதை வருண்குமார் தெளிவுபடுத்த வேண்டும் என்று நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.எந்த அடிப்படையில் நாங்கள் பிரிவினைவாதிகள் ? - சீமான்

கோவையில் நாம் தமிழர் கட்சி மாணவர் அமைப்பினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், எந்த அடிப்படையில் நாங்கள் பிரிவினைவாதிகள் என்று  ஐ.பி.எஸ்  வருண்குமார் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

we-r-hiring

இவர் தான் நாட்டை ஆளுகிறாரா?. எதை வைத்து பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி கூட இல்லாமல் எப்படி ஐபிஎஸ் ஆனார். தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதமாகும். உன் தாய் மொழி எது?. உண்மையான தமிழ் தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி பேச மாட்டாய். உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா?. பேசும் போது பார்த்து பேச வேண்டும். அந்த மாநாட்டில் இவர் பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது?. இதுதான் உன் வேலையா? என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா?. நடிகர் விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டு இருக்க நாங்கள் மன நோயாளி அல்ல. சரி என்றால் சரி. தவறு என்றால் தவறு. எந்த புயல் பாதிப்பிற்கும் ஒன்றிய அரசு உதவி செய்யவில்லை மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்து விட்டு பேரிடர் காலங்களில் கூட ஒன்றிய அரசு உதவுவது இல்லை.

இதனை கேள்வி கேட்டால் எங்களை ஆன்டி இந்தியன் என்கிறார்கள். குஜராத், பீகார் மாநில வெள்ள பாதிப்பிற்கு உடனே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் . தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் எனக்கு நான்காம் பட்சம் தான். மண்ணும் மக்களும் தான் எனக்கு முக்கியம். அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது கேவலமானது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்கச் செல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் உணவை உறுதி செய்யுங்கள். நான் என்ன கறி வேண்டுமானாலும் உண்பேன். உனக்கென்ன? உணவு, உடை என்பது உரிமை .மாடு புனிதம் தானே? பின் எதற்காக மாட்டுக்கறியை ஒன்றிய அரசு ஏற்றுமதி செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளாா்.

“மோடியும் அதானியும் ஒன்று” நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

MUST READ