spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது!

‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது!

-

- Advertisement -

புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது!

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான படம் புஷ்பா 2. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை சுகுமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனவுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் மற்றும் மாநிலங்களில் அதிகாலைக் காட்சியுடன் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது!இத்தகைய சூழலில் நடிகர் அல்லு அர்ஜுன், உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதே சமயம் தெலுங்கானா அரசு இனி எந்த படத்திற்கும் அதிகாலை காட்சி இல்லை என்று தடை விதித்துள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ