spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஸ்ரீதேஜின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

ஸ்ரீதேஜின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

-

- Advertisement -

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தில் பிரிமியம் காட்சியை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த ஸ்ரீதேஜ் கடந்த பத்து நாட்களாக ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீதேஜின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

we-r-hiring

அதில் ஸ்ரீதேஜுக்கு வென்டிலேட்டரில் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது.  அவருக்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது.    எனவே அவர் தற்போது பூரண நலமுடன் இருப்பதாக கூற முடியாது.  நிலையான நரம்பியல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை வென்டிலேட்டரில் இருந்து வெளியே கொண்டு வர டிராக்கியோஸ்டமியைத் வழங்கி வருகிறோம் .

ஸ்ரீதேஜின் மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை.  தற்போது குழாய் மூலம் உணவு அளித்து வருகிறோம்.  சிறுவனின் உடல்நிலை குறித்து அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மறுபுறம், புஷ்பா 2 படக்குழு தொடர்ந்து தேஜ் உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறது.  குழந்தைக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து ₹ 4 லட்சம்  மதிப்புள்ள ஊசி பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு செலுத்தப்பட்டது.

ஸ்ரீதேஜின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

சமீபத்தில் ஹீரோ அல்லு அர்ஜூனும் இறந்த ஸ்ரீதேஜ் தாய் ரேவதியின் குடும்பத்திற்கு ₹ 25 லட்சம்  அறிவித்தார். மேலும், ஸ்ரீ தேஜ், மருத்துவமனையின் செலவுகள் மற்றும் எதிர்காலத்தில் எது தேவையோ அதை வழங்குவதாக உறுதியளித்தார்.மேலும் இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து தயாரிப்பாளர் பன்னிவாஸ், மைத்ரி தயாரிப்பாளர்கள், ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் குழுவினர் ,ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து டாக்டர்களுடன் தகவல் கேட்டு வருகின்றனர்.

குறிப்பாக தயாரிப்பாளர் பன்னிவாஸ் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கேட்டறிந்து நடிகர் அல்லு அர்ஜுனிடம் தெரிவித்து வருகிறார். இதற்கிடையே ஸ்ரீதேஜ் உடல் நிலை குறித்து ஐதாராபாத் காவல் ஆணையர்  சி.வி.ஆனந்த், சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டினா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து டாக்டர்களுடன் கேட்டறிந்து வருகின்றனா்.

மாணவர்களை தோளில் சுமந்து செல்லும் அவலம்… விடிவுகாலம் பிறக்குமா?

 

MUST READ