நடிகர் சிவகார்த்திகேயன், அதர்வா குறித்து பேசி உள்ளார்.
விஷ்ணுவரதன் இயக்கத்தில் நேசிப்பாயா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 3) நேசிப்பாயா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
#SK25 Update💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 3, 2025

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் SK25 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “எனக்கும் அதர்வாவிற்குமான காம்பினேஷன் காட்சி இன்னும் வரவில்லை. ஆனால் SK 25 படத்தில் அதர்வாவின் ரோல் மிகவும் ஸ்பெஷலானது. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடிக்கும். அதேபோல் அதற்கு நிகராக அதர்வாவின் கதாபாத்திரமும் எனக்கு பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் SK 25 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து நடிகர் ஜெயம் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் (வில்லனாக) நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.