Homeசெய்திகள்சினிமாரஜினியின் மகத்துவத்தை பற்றி பேச நான் மிகவும் சிறியவன்.... ரன்வீர் சிங்!

ரஜினியின் மகத்துவத்தை பற்றி பேச நான் மிகவும் சிறியவன்…. ரன்வீர் சிங்!

-

- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ரஜினி குறித்து பேசி உள்ளார்.ரஜினியின் மகத்துவத்தை பற்றி பேச நான் மிகவும் சிறியவன்.... ரன்வீர் சிங்!

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினி. இவர் இன்றைய தலைமுறையினருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். அதேசமயம் இந்த வயதிலும் சினிமாவிற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் வெளியானது. அடுத்தது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நெல்சன் – ரஜினி – அனிருத் ஆகியோரின் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது.ரஜினியின் மகத்துவத்தை பற்றி பேச நான் மிகவும் சிறியவன்.... ரன்வீர் சிங்! இதன் படப்பிடிப்புகள் கேரளா, கோவா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி முதல் கோவாவில் 56வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த விழாவில் திரைத்துறையில் பல சாதனைகளை படைத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அந்த வகையில் திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்த ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

we-r-hiring

அப்போது விழாவில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், ரஜினி குறித்து பேசினார். அதன்படி அவர், “ரஜினிகாந்தின் மகத்துவத்தை பற்றி பேச நான் மிகவும் சிறியவன். ஜெயிலர் 2 படத்திற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மட்டுமே சொல்ல முடியும். ஹுக்கும்…” என்று மேடையில் பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ