spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபெண்களை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை - நாராயணசாமி

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை – நாராயணசாமி

-

- Advertisement -

பாஜகவுக்கு பெண்களை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை: பாஜகவினர் மேல் தான் பாலியல் பலாத்கார வழக்கு அதிகம் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என நாடகத்தை தமிழகத்தில் பாஜக அரங்கேற்ற வேண்டாம்- நாராயணசாமி பேட்டி.

பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை - நாராயணசாமிஅண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன்.

we-r-hiring

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து சவுக்கு அடி போராட்டம் நடத்தியுள்ளார். அண்ணாமலை சரித்திரத்தை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் பாலியல், பெண்கள் நிர்வாணமாக்குதல் போன்ற வன்கொடுமைகள் அங்கு பூதாகரமாக தலைவிரித்து ஆடுகிறது. அங்கு பாஜக ஆட்சிதான் நடக்கிறது. அங்கு அண்ணாமலை சென்று சவுக்கை அடி அடித்துகொள்வாரா? மேலும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பெண்கள் கடத்தல், காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.

பாஜக மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் பெண்களுக்கு பாஜக ஆதரவாக பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். பாஜகவுக்கு பெண்களை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை. பாஜகவினர் மேல் தான் பாலியல் பலாத்கார வழக்கு அதிகம் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என நாடகத்தை தமிழகத்தில் பாஜக அரங்கேற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார்.

MUST READ