நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு அருண் விஜயின் வணங்கான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதன்படி நாளை (ஜனவரி 10) இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அருண் விஜய், வணங்கான் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதிலும் வணங்கான் படத்தில் டீசர், ட்ரெய்லர் போன்றவைகளில் அருண் விஜய் வசனம் பேசுவது போல் எந்த காட்சிகளும் இடம் பெறவில்லை. எனவே இது குறித்து செய்தியாளர்களில் ஒருவர் வணங்கான் படத்தில் வாய் பேசாதவராக
நடித்திருக்கிறீர்களா? என்று அருண் விஜயிடம் கேட்டார். அதற்கு அருண் விஜய், “அது எந்த மாதிரியான கதாபாத்திரம் என்று நீங்கள் படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். அந்த கதாபாத்திரத்தை பாலா எப்படி வடிவ வைத்திருக்கிறார் என்பதும் தெரியும். கண்டிப்பா இந்த படம் எல்லோரையும் ஈர்க்கக்கூடிய கதைதான். இந்த படத்தில் இடம்பெறும் எமோஷனல் காட்சிகள் அனைவரையும் கனெக்ட் பண்ணும். படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கின்றன. எந்த இடத்திலும் போர் அடிக்காது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -