- Advertisement -
நடிகர் அஜித்குமாரின் தந்தை இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருடைய தந்தை சுப்பிரமணியன் தாய் மோகினி. இவர்கள் சென்னையில் தனியாக வசித்து வருகின்றனர்.


அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென இன்று அதிகாலை 3:15 மணி அளவில் காலமானார்.
இவரின் உயிர் இழப்பு அஜித்தையும் அவர்கள் குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து திரை பிரபலங்கள் பலரும் அஜித் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


