spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரிலீஸ் தேதியை லாக் செய்த 'வீர தீர சூரன்- பாகம் 2' படக்குழு!

ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘வீர தீர சூரன்- பாகம் 2’ படக்குழு!

-

- Advertisement -

வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ரிலீஸ் தேதியை லாக் செய்த 'வீர தீர சூரன்- பாகம் 2' படக்குழு!

சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் விக்ரமின் 62 வது படமாகும். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும் சுராஜ் வெஞ்சரமூடு, எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருக்கிறார். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.ரிலீஸ் தேதியை லாக் செய்த 'வீர தீர சூரன்- பாகம் 2' படக்குழு! இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதைத்தொடர்ந்து கல்லூரும் எனும் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படமானது 2025 ஜனவரி மாதம் இறுதியில் திரைக்கு வரும் என சொல்லப்பட்டது.ரிலீஸ் தேதியை லாக் செய்த 'வீர தீர சூரன்- பாகம் 2' படக்குழு! ஆனால் விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என தகவல் வெளிவரும் நிலையில் வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் மார்ச் மாதம் இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2025 மார்ச் மாதம் 28ஆம் தேதி வீர தீர சூரன் பாகம் 2 படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ