பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது ஒளிபரப்பாகி வரும் 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அதன் பின்னர் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்குவார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்தது. ஆனால் முதல் நாளிலேயே தன்னுடைய ஸ்டைலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஒரு சிறந்த தொகுப்பாளராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார் விஜய் சேதுபதி. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரும் வெளியேற்றப்பட்டு வந்தனர். அதன்படி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஜாக்குலின் வெளியேற்றப்பட்டார். ஜாக்குலினை தவிர முத்துக்குமரன், விஷால், ரயான், சௌந்தர்யா, பவித்ரா ஆகிய ஐந்து பேரும் வீட்டிற்குள் இருக்கின்றனர். இதில் ரயான் டிக்கெட் டு பினாலே மூலம் நேரடியாக பைனலுக்குள் நுழைந்து இருக்கிறார். இருப்பினும் நேற்று பதிவாகியுள்ள வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டிலை முத்துக்குமரன் தட்டி செல்வார் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இரண்டாம் இடத்தில் சௌந்தர்யாவும், விஷால், ரயான், பவித்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் வெல்வார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் முத்துக்குமாரனுக்கு டைட்டில் வென்றதனால் 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.