spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

-

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்! இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 16ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்து சைஃப் அலிகானை 6 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதனால் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் சைஃப் அலிகானின் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதேசமயம் தேடுதல் வேட்டைக்கு பிறகு சைஃப் அலிகானை குத்திய அந்த நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!இந்நிலையில்  கடந்த நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சைஃப் அலிகான் இன்று (ஜனவரி 21) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மேலும் அவரது வீட்டிற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சைஃப் அலிகான் கடைசியாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்தது இவர், பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஸ்பிரிட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

MUST READ