சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் இருப்பவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், சுவாசிகா, யோகி பாபு, ஷிவதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதே சமயம் இந்த படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டு கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அடுத்தது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.