spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதந்தையை மிரட்ட தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நாடகம்... பரிதாபமாய் கருகிப்போன உயிர்..!

தந்தையை மிரட்ட தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நாடகம்… பரிதாபமாய் கருகிப்போன உயிர்..!

-

- Advertisement -

சென்னை மதுரவாயில் மேட்டுக்குப்பம் சாலையில் தந்தையிடம் பைக் வாங்கி தர கேட்டு அடம் பிடித்த மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது. தந்தையை மிரட்ட தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நாடகம்... பரிதாமாய் கருகிப்போன உயிர்..!

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் முருகன்/42. கட்டிடக்கழிவுகளை தரம் பிரிக்கும் பணி செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி 19 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளான். தந்தைக்கு உதவியாக இருந்த ஜீவா தனக்கு பைக் வாங்கி தர வேண்டி பலமுறை தந்தை முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் பைக் வாங்கி தராததால் நேற்று முன்தினம் முருகன் வேலை செய்யும் மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள அவரது ஷெட்டிற்கு வந்த ஜீவா அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து கேனில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு பைக் வாங்கி தரவில்லை என்றால் பெட்ரோலில் தீக்குளித்து விடுவேன் என தந்தையை மிரட்டி உள்ளார்.

we-r-hiring

சற்று நேரத்தில் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவா  கையில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு அருகே குளிர் காய்வதற்காக மூட்டி வைக்கப்பட்டிருந்த தீயின் அருகே சென்று தீயில் இறங்கிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.அப்போது ஜீவாவே எதிர்பாராத நிலையில்  தீ சட்டென்று ஜீவாவின் உடலில் பற்றியது. இதை அடுத்து செய்வதறியாத திகைத்து இருந்த முருகன் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மணல் மற்றும் துணியைக் கொண்டு தீயை அணைத்து ஜீவாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜீவா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

MUST READ