தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான லவ் டுடே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அதிக வசூலை வாரிக் குவித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் டிராகன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
இந்த ட்ரைலரை பார்க்கும்போது பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் அடாவடித்தனம் பண்ணும் பொறுப்பில்லாத கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இவருடைய வாழ்க்கையில் ஏற்படும் காதலும், காதல் தோல்வியும் இவரை பொறுப்புள்ள மனிதனாக எப்படி மாற்றுகிறது? என்பதுதான் டிராகன் படத்தின் கதை போல் தெரிகிறது.
#Dragon – Archana Kakpathi About the film ⭐:
“It’s a Very Meaningful Film.. It’s not a silly college film.. The college going boys who have bad habits should watch this film.. We tried to convey something..”✌️ pic.twitter.com/crMC08igsn
— Laxmi Kanth (@iammoviebuff007) February 11, 2025
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதனிடம், செய்தியாளர்களில் ஒருவர், “இன்றைய இளைஞர்கள் பலரும் உங்களை பின்பற்றுகிறார்கள். ஆனால் படம் முழுக்க நீங்கள் சிகரெட்டை கையில் வைத்தபடி நடித்திருக்கிறீர்கள். எனவே இனிமேல் இதுபோன்ற படங்களில் தான் நீங்கள் நடிப்பீர்களா?” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு உடனடியாக பிரதீப் ரங்கநாதனுக்கு அருகில் அமர்ந்திருந்த இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “இந்த படம் மிகவும் அர்த்தமுள்ள படம். இது வெறும் காலேஜ் படம் மட்டும் இல்லை. கெட்ட பழக்கம் உள்ள காலேஜ் போகும் இளைஞர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும். நாங்கள் இந்த படத்தின் மூலம் முக்கியமான ஒன்றை சொல்ல முயற்சித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.