spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்பு உண்மையிலேயே மிகவும் பவர்ஃபுல்லானவர்.... அஸ்வத் மாரிமுத்து பேட்டி!

சிம்பு உண்மையிலேயே மிகவும் பவர்ஃபுல்லானவர்…. அஸ்வத் மாரிமுத்து பேட்டி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்தவர். சிம்பு உண்மையிலேயே மிகவும் பவர்ஃபுல்லானவர்.... அஸ்வத் மாரிமுத்து பேட்டி!இதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இதன் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, சிம்பு குறித்து பேசியுள்ளார். அதாவது நடிகர் சிம்புவின் 51வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிம்பு உண்மையிலேயே மிகவும் பவர்ஃபுல்லானவர்.... அஸ்வத் மாரிமுத்து பேட்டி!இந்நிலையில் தான் அஸ்வந்த் மாரிமுத்து, “சிம்பு பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். STR 51 படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தினோம். அதன் பின்னர் அது தொடர்பான ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டு இருந்தோம். அப்போது அவருடைய தோற்றம் மிகவும் பவர்ஃபுல்லாக இருந்தது. திரைக்குப் பின்னால் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தவர் திரையில் பார்க்கும்போது பவர்ஃபுல்லாக தோன்றுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ