spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'SK 23' படத்தின் டைட்டில் இதுவா?.... வெளியான புதிய தகவல்!

‘SK 23’ படத்தின் டைட்டில் இதுவா?…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

SK 23 படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'SK 23' படத்தின் டைட்டில் இதுவா?.... வெளியான புதிய தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ந்து வெற்றி பட இயக்குனர்களுடன் கைகோர்த்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. அதே சமயம் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு SK 23 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களை போல் இந்த படமும் ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 17) அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் SK 23 படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

we-r-hiring

அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக குட்டி டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் SK 23 படத்திற்கு ‘சிகரம்’ அல்லது ‘மதராசி’ ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றுதான் இந்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட காலகட்டத்தில் இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்ட இருப்பதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் SK 23 படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

MUST READ