spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாளை மாலை வெளியாகும் 'குட் பேட் அக்லி' டீசர்.... ரன்னிங் டைமுடன் அறிவித்த படக்குழு!

நாளை மாலை வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ டீசர்…. ரன்னிங் டைமுடன் அறிவித்த படக்குழு!

-

- Advertisement -

குட் பேட் அக்லி பட டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.நாளை மாலை வெளியாகும் 'குட் பேட் அக்லி' டீசர்.... ரன்னிங் டைமுடன் அறிவித்த படக்குழு!

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படம் அஜித்தின் 63வது படமாகும். இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். நாளை மாலை வெளியாகும் 'குட் பேட் அக்லி' டீசர்.... ரன்னிங் டைமுடன் அறிவித்த படக்குழு!இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் அஜித், தீனா பட லுக்கில் நடித்திருக்கிறார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இப்படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

we-r-hiring

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகின. அடுத்தது இந்த படத்தின் டீசர் நாளை (பிப்ரவரி 28) வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 1 நிமிடம் 34 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட குட் பேட் அக்லி நாளை மாலை 7.03 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எனவே ரசிகர்கள் இந்த டீசரை கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள்.

MUST READ