நடிகர் ரவி மோகன், சித்தார்த் பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ரவி மோகன் தமிழ் சினிமாவில் ஜெயம், எம். குமரன், சந்தோஷ், சுப்ரமணியம், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் சமீபகாலமாக ரவி மோகன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே சமயம் ரவி மோகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் ஜீனி எனும் திரைப்படம் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்தது டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன்.
இந்நிலையில் இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான அவள் என்ற ஹாரர் திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -