நடிகை சமந்தா எனது முதல் சாய்ஸ் இல்லை என்று சாகுந்தலம் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.தற்போது நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படம் இதிகாச கதையமைப்பில் உருவாகி வருகிறது.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் குணசேகர் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் சாகுந்தலம் படத்திற்கு சமந்தா எனது முதல் தேர்வு இல்லை. ஆனால் எனது மகள் தான் சமந்தாவின் பெயரை பரிந்துரை செய்தார். எனவே நான் ரங்கஸ்தலம் படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். அதில் சமந்தா கிராமத்து பெண்ணாக நடித்ததை பார்த்து வியந்தேன். எனவே அவர் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் படத்தின் கதையைக் கூறினேன். அவரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை 6 மாதங்களில் முடிக்க திட்டமிட்டேன். ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தை முடிக்க அதை விட அதிக கால அவகாசம் தேவைப்பட்டது. 81 நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
மேலும் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முடிய 1.5 வருடங்கள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்த படத்திற்காக இயக்குனர் 3 வருடங்களை செலவழித்துள்ளார்.
சாகுந்தலம் படத்தில் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். மோகன் பாபு கபீர் பேடி, அதிதி பாலன், அனன்யா நாகலா நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.