spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்என்னை ஏன் சந்திக்கவில்லை என செங்கோட்டையனிடம் கேளுங்கள்… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

என்னை ஏன் சந்திக்கவில்லை என செங்கோட்டையனிடம் கேளுங்கள்… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

-

- Advertisement -

”செங்கோட்டையன் என்னை ஏன் சந்திக்கவில்லை என அவரைக் கேளுங்கள். தனிப்பட்ட பிரச்னையை இங்கே பேச முடியாது. நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாயிகளை ஏமாற்றுவதில் திராவிட மாடல் அரசினர் வல்லவர்கள். வேளாண் நிதிநிலை அறிக்கை என ஒன்றை தயாரித்து பேரவையில் அதை 1.45 மணி நேரம் வாசித்ததே இவர்களின் சாதனை. முளைக்காத விதை, உபயோகமற்ற உயிர் உரங்கள் என இவர்கள் தவறு செய்வதற்கான வசதியான திட்டங்களை தவிர, விவசாயிகளுக்கு பயன்படும் எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.

we-r-hiring

5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரமாக வாசித்துள்ளனர். வேளாண் பட்ஜெட்டை 1.30 மணி நேரம் வாசித்தது மட்டுமே திமுகவின் சாதனை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இது உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நெல், கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் பல உள்ளன. சாகுபடி பரப்பை 75 சதவிகிதமாக உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை 37.7 சதவிகிதமாகவே உள்ளது.Agri Budget tabled in TN Assembly

அத்திக்கடவு அவினாசி திட்டம் போல் ஒரு திட்டத்தை திமுக கொண்டு வரவில்லை. அத்திக்கடவு அவினாசியில் 2வது திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதனையும் இந்த அரசு கைவிட்டுள்ளது. கடன் பெற்றுதான் திட்டங்களை நிறைவேற்றும் நிலை உள்ளது. கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதுதான் திமுக அரசு செய்த சாதனையாகும். நிதி மேலாண்மையை சரி செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்தது? நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நிறைய கடன் வாங்கியுள்ளது. மழைநீரை சேமிக்கும் குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழுமையாக கடனில் மூழ்கியுள்ளது.

செங்கோட்டையன் என்னை ஏன் சந்திக்கவில்லை என அவரைக் கேளுங்கள். தனிப்பட்ட பிரச்னையை இங்கே பேச முடியாது. நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை” என அவர் தெரிவித்தார்.

MUST READ