spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்ஸ்டாகிராமில் உலகளவில் சாதனை... ஆட்டநாயகன் என்பதை நிரூபித்த தளபதி!

இன்ஸ்டாகிராமில் உலகளவில் சாதனை… ஆட்டநாயகன் என்பதை நிரூபித்த தளபதி!

-

- Advertisement -

நடிகர் விஜயின் இன்ஸ்டாகிராம் கணக்கு உலகளவில் சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விஷயத்தை ட்ரெண்டிங் செய்வது நம் நெட்டிசன்கள் வழக்கம். அப்படி இன்றைக்கு சமூக வலைத்தளங்களை அசரடித்து வரும் செய்தி நடிகர் விஜயின் இன்ஸ்டாகிராம் கணக்கு.

we-r-hiring

ஆம், நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு துவங்கி உள்ளார். தமிழில் சோசியல் மீடியாவின் கிங் ஆக வலம் வரும் அவர் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருந்தார்.

vijay
vijay

தற்போது எல்லா இடமும் நம்ம இடம் தான் என்பதைப் போல இன்ஸ்டாகிராம் தளத்திலும் அதிகாரப்பூர்வ கணக்கு துவங்கியுள்ளார். அதில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் விஜய் வந்த அடுத்த நொடி முதல் ரசிகர்கள் அவரைப் பின் தொடர குவிந்து வருகின்றனர்.

தற்போது பாலோவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனை தாண்டியுள்ளது. இதன் மூலம் குறுகிய நேரத்தில் 1 மில்லியன் பாலோவர்கள் பெற்றதில் விஜய் உலகளவில் சாதனை படைத்துள்ளார்.

Image

1. BTS V – 43 நிமிடங்கள்
2. ஏஞ்சலினா ஜோலி – 59 நிமிடங்கள்
3. விஜய் – 99 நிமிடங்கள்
4. மூன் டே நோய் – 105 நிமிடங்கள் என்ற கணக்கில் மில்லியன் பாலோவர்களைப் பெற்றுள்ளனர். இதில் நடிகர் விஜய் உலகளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ