spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் இந்த ஸ்கிரிப்டை விக்ரமுக்காக எழுதவில்லை.... 'வீர தீர சூரன்' குறித்து அருண்குமார்!

நான் இந்த ஸ்கிரிப்டை விக்ரமுக்காக எழுதவில்லை…. ‘வீர தீர சூரன்’ குறித்து அருண்குமார்!

-

- Advertisement -

வீர தீர சூரன் படத்தின் ஸ்கிரிப்டை விக்ரமுக்கு எழுதவில்லை என இயக்குனர் அருண்குமார் கூறியுள்ளார்.நான் இந்த ஸ்கிரிப்டை விக்ரமுக்காக எழுதவில்லை.... 'வீர தீர சூரன்' குறித்து அருண்குமார்!

தமிழ் சினிமாவில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அருண்குமார். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரா -ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற மார்ச் 27 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. நான் இந்த ஸ்கிரிப்டை விக்ரமுக்காக எழுதவில்லை.... 'வீர தீர சூரன்' குறித்து அருண்குமார்!இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்று (மார்ச் 20) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார், “நான் இந்த ஸ்கிரிப்டை விக்ரம் சாருக்காக எழுதவில்லை. ஆனால் விக்ரம் சாரிடம் இந்த ஸ்கிரிப்டை விவரிக்கும்போது நான் உங்களுக்காக இதை எழுதவில்லை என்று அவரிடம் சொல்லி விட்டேன்.

we-r-hiring

அவர் அப்போது என்னுடைய சித்தா படத்தை பார்க்கவில்லை. முதல் 20 நிமிட கதையை சொன்னதும் விக்ரம் சாருக்கு அது மிகவும் பிடித்தது. உடனே அவர் நீங்கள் இன்னும் எழுதிட்டு வாங்க, இன்று சித்தா படத்தை பார்த்து விடுகிறேன் என்று சொன்னார். படம் பார்த்து முடித்துவிட்டு உடனடியாக என்னை தொடர்பு கொண்டு படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று சொல்லிவிட்டார். விக்ரம் சார், இந்த கதை இந்த உலகத்தில் இருந்தால் நல்லா இருக்கும் என்று அவரே நினைத்ததனால் எனக்கு மிகவும் எளிமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ