spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைப்புயல்

மாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைப்புயல்

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் பெருமை என போற்றப்படுபவர் வைகைப் புயல் வடிவேலு. ஏராளமான கதாபாத்திரங்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்தவர் இடையில் சில பிரச்சனைகள் காரணமாக நடிப்பில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் வடிவேலு ரிட்டர்ன் ஆகியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து சுராஜ் இயக்கியுள்ளார்.

லைகா தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவரும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

we-r-hiring

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் காத்து வாங்குகிறது. அதுவும் படம் பார்ப்பவர்களை விட யூடியூப் ரிவியூவர்கள் தான் எல்லா திரையரங்குகளிலும் நிறைந்துள்ளனர். மழையால் நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை திரையில் காணும் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இருப்பினும் வடிவேலு படம் என்பதால் வரும் நாட்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயலால் வைகைப் புயலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமான ஒன்றுதான்.

MUST READ