spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநாளுக்கு நாள் குறைய தொடங்கிய 'எம்புரான்' வசூல்.... இதுதான் காரணமா?

நாளுக்கு நாள் குறைய தொடங்கிய ‘எம்புரான்’ வசூல்…. இதுதான் காரணமா?

-

- Advertisement -

மலையாளத்தில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் மோகன்லால் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நாளுக்கு நாள் குறைய தொடங்கிய 'எம்புரான்' வசூல்.... இதுதான் காரணமா?அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி இருந்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வந்தது. பான் இந்திய அளவில் உருவாகியிருந்த இந்த படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். இதில் மோகன்லாலுடன் இணைந்து மஞ்சு வாரியர், சுராஜ், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றாலும் குறுகிய நாட்களில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இதற்கிடையில் எம்புரான் படத்தை வெளியிட தடை செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அதற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது. அதே சமயம் இந்த படத்தில் கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்வது போன்ற காட்சிகளும், மதப் பிரச்சனையை தூண்டும் இதமான காட்சிகளும் இடம் பெற்றிருந்ததால் இந்த படத்தில் இருந்து மொத்தமாக 24 காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. நாளுக்கு நாள் குறைய தொடங்கிய 'எம்புரான்' வசூல்.... இதுதான் காரணமா?மேலும் பஜ்ரங்கி என்று வைக்கப்பட்டிருந்த வில்லன் பெயரும் பால்தேவ் என மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் ஆரம்பத்தில் வசூலில் மாஸ் காட்டி வந்தாலும் தற்போது இப்படத்தின் வசூல் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே ரூ. 300 கோடியை தாண்டுமா? என்பதே சந்தேகம்தான். அடுத்தது அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஒத்த படமே சீர்குலைந்து விட்டதனால் இப்படத்தின் வசூல் குறைய தொடங்கிவிட்டன என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ