விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தனது 69வது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத்தின் இசையிலும் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவிலும் இப்படம் தயாராகி வருகிறது. இதில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பிரியாமணி, நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். அரசியல்வாதியாக மாறி உள்ள விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படமானது அரசியல் தொடர்பான கதையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கும் படம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அடுத்தது வருகின்ற தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் விஜய் புதிய லுக்கில் காண்பிக்கப்படுவார் எனவும் ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் புதிய போஸ்டரில் விஜய் முறுக்கு மீசையில் காணப்படுவார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த அப்டேட் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.