Homeசெய்திகள்சினிமா'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஜெய் பீம் மணிகண்டனின் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிபரப்ப பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டைட்டில் டீசரும், அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து முகை மழை எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து நாளைய (ஏப்ரல் 16) மாலை 5 மணி அளவில் இந்த படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் என படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.

MUST READ