spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவெட்ககரமான 100ஆவது நாள் - விளாசி எடுக்கும் பாஜக

வெட்ககரமான 100ஆவது நாள் – விளாசி எடுக்கும் பாஜக

-

- Advertisement -

வேங்கை

வேங்கை வயல் கொடுமைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றுகூட பார்வையிடவில்லை. சம்பவம் நடந்து 100 நாட்கள் ஆன பின்னரும் கூட இந்த அவலம் தொடர்வதால் விளாசி எடுத்திருக்கிறது பாஜக.

we-r-hiring

‘வெட்ககரமான’ நூறாவது நாள் இன்று என்கிற தலைப்பில் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, அரசின் கையாலாகாத தனத்தை விளாசியிருக்கிறார்.

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்து இந்த நூற்றாண்டின் மாபெரும் அவமான சின்னத்தை உருவாக்கி நூறு நாட்கள் நகர்ந்து விட்டன. ஆனால், இன்று வரை இந்த கொடூரத்தை, கேவலத்தை, அராஜகத்தை, குரூரத்தை செய்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியாத தமிழக அரசின் ‘கையாலாகாத்தனம்’ அல்லது அலட்சியம், நடந்த சம்பவத்தை விட அருவருக்கத்தக்கது என்று கொதித்தெழுந்திருக்கும் நாராயணன்,

தமிழக முதல்வர், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் சமூக நீதி குறித்து பேசுவது நகைப்புக்குரியது. இரண்டு சீட்டுகளுக்கு பல கோடிகளை பெற்றுக்கொண்டு உல்லாசமாக இருக்கும் கம்யூனிஸ்டுகளின் கோர முகம் இந்த விவகாரத்தில் அந்த கட்சிகள் கொண்டிருக்கிற அக்கறையினால் வெளிப்பட்டு விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்வதாக மார்தட்டிக் கொள்ளும் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்த விவகாரத்தில் ஒடுங்கி, ஒதுங்கி மௌனம் காப்பது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சக்கட்டம். “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க மனமில்லாத தி மு க அரசை கண்டித்து நான் தி மு க கூட்டணியை விட்டு வெளியேறுகிறேன், அந்த கூட்டணியில் இணைந்து நான் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று திருமாவளவன் அவர்கள் முழங்கியிருக்க வேண்டாமா?என்று கேட்கிறார்.

அரசியல் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியால் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் ‘அருவருப்பான மனநிலையோடு’ நூறு நாட்களை கடந்து தினம் தினம் மடிந்து கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அந்த கடமையிலிருந்து தவறி விட்டார் என்கிறார் ஆவேசத்துடன்.

MUST READ