நடிகர் சூர்யா பிரசித்தி பெற்ற கோயிலில் மனைவி ஜோதிகாவுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக ஜொலிப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி என பல படங்களில் நடித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் நடந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மகன் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நடிப்பதில் மட்டுமல்லாமல் சமூக சேவை செய்வதிலும் ஆர்வமுடையவர்கள். இது தவிர திரை உலகை விட்டு விலகாமல் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறார்கள். அந்த வகையில் விவாகரத்திற்காக நீதிமன்ற வாசலில் வரிசை கட்டி நிற்கும் பிரபலங்களுக்கு மத்தியில் நம்பிக்கைக்குரிய தம்பதியாகவும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றனர். சமீபத்தில் கூட ‘ரெட்ரோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, “என்னுடைய கண்ணாடி பூ ஜோ இல்லையென்றால் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக திரைத்துறையில் பயணித்திருக்க முடியாது” என்று கூறியிருந்தார். இதற்கிடையில் நடிகை ஜோதிகாவும் கங்குவா படத்தை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்கள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இவ்வாறு இருவருமே திருமண உறவில் காதல் மட்டும் அல்லாமல் புரிதலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் எவ்வளவுதான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் தங்களது குடும்பம், குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இருவரும் இணைந்து கொல்ஹாபூர் மகாலட்சுமி மற்றும் அஸ்ஸாமில் உள்ள காமாக்யா தேவி கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இப்புகைப்படங்கள்