spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டூரிஸ்ட் ஃபேமிலி' டப்பிங் அலப்பறைகள்.... கலகலப்பான வீடியோவை வெளியிட்ட படக்குழு!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ டப்பிங் அலப்பறைகள்…. கலகலப்பான வீடியோவை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.'டூரிஸ்ட் ஃபேமிலி' டப்பிங் அலப்பறைகள்.... கலகலப்பான வீடியோவை வெளியிட்ட படக்குழு!

சசிகுமார் நடிப்பில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வரும் ஈழத் தமிழர்கள் தங்களின் வலிகளை மறந்து எப்படி சந்தோசமாக வாழ்கிறார்கள் என்பதை பின்னணியாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

we-r-hiring

இதன்படி இப்படத்தில் சசிகுமார், சிம்ரன் போன்றோர் இலங்கை தமிழில் பேசியிருக்கின்றனர். மேலும் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் டப்பிங் பேசிய கலகலப்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

MUST READ