Homeசெய்திகள்சினிமாஇறுதிக்கட்டத்தை நெருங்கிய 'ஜனநாயகன்' படப்பிடிப்பு!

இறுதிக்கட்டத்தை நெருங்கிய ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு!

-

- Advertisement -

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இறுதிக்கட்டத்தை நெருங்கிய 'ஜனநாயகன்' படப்பிடிப்பு!

நடிகர் விஜயின் 69 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அரசியல் கலந்த கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படமானது 2026 ஜனவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இறுதிக்கட்டத்தை நெருங்கிய 'ஜனநாயகன்' படப்பிடிப்பு! இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90% நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி கொடைக்கானலில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ