Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை!

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை!

-

- Advertisement -

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் மற்றுமொரு பிரபல நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது ட்ரெயின், காந்தி டாக்ஸ், ஏஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துள்ள விஜய் சேதுபதி, மணிகண்டன் இயக்கத்தில் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி அடுத்தது பான் இந்திய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன்படி இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் தானே தயாரித்து, இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை!இதற்கிடையில் இந்த படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் பஹத் பாசில் இதில் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராக இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில் தற்போது இப்படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை!அதாவது நடிகை தபு தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தே தான் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது. ஆதலால் தபுவின் கதாபாத்திரம் வேறொரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை ராதிகா ஆப்தே, விஜய் சேதுபதியுடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ