Homeசெய்திகள்சினிமாசூரியின் 'மாமன்' படத்திலிருந்து வெளியான புதிய அறிவிப்பு!

சூரியின் ‘மாமன்’ படத்திலிருந்து வெளியான புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

சூரியின் மாமன் பட புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.சூரியின் 'மாமன்' படத்திலிருந்து வெளியான புதிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூரி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் சூரி. சூரியின் 'மாமன்' படத்திலிருந்து வெளியான புதிய அறிவிப்பு!குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரியுடன் இணைந்து ராஜ்கிரண், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சுவாசிகா, பால சரவணன், பாபா பாஸ்கர், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் கருடன் படத்தை போல் இந்த படத்திலும் நடிகர் சூரி ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஹேஷம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைக்க தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.சூரியின் 'மாமன்' படத்திலிருந்து வெளியான புதிய அறிவிப்பு! இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை மறுநாள் (மே 1ஆம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ