STR 49 படத்தின் பூஜை புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிம்பு நடிப்பில் அடுத்ததாக STR 49 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்கிங் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்க இருக்கிறார். கல்லூரி சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சிம்பு, ரௌடி மாணவனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் கயடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
STaRting off #STR49 with a bang 🔥
All smiles and energy at this positive beginning ❤️@SilambarasanTR_ @ImRamkumar_B @iamsanthanam @AakashBaskaran @SaiAbhyankkar @11Lohar @manojdft @PraveenRaja_Off @manojmaddymm @prosathish @teamaimpr pic.twitter.com/XHU5QtZCfd
— DawnPictures (@DawnPicturesOff) May 3, 2025

இது தவிர நடிகை மிர்ணாள் தாகூர் இப்படத்தில் கல்லூரி பேராசிரியையாக நடிக்க உள்ளார் என சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இந்த படத்தின் பூஜை (இன்று மே 3) சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
— DawnPictures (@DawnPicturesOff) May 3, 2025
பூஜையில் சிம்பு, சந்தானம், ஆகாஷ் பாஸ்கரன், ராம்குமார் பாலகிருஷ்ணன்,விடிவி கணேஷ், சாய் அபியங்கர், கயடு லோஹர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை 2025 ஜூன் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.