நான்கு தமிழ் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
சர்தார் 2
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் சாரார் 2. பிஎஸ் மித்ரன் இயக்கத்திலும், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.
எல்ஐகே
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
பைசன்
வாழை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் தான் பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படமும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 45
நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் இணைந்த திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் இந்த படமானது 2025 தீபாவளிக்கு திரைக்கு வரும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்பட்டு விட்டால் இந்த ஆண்டில் வெளியாகும் அல்லது இப்படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் என்றும் தகவல் வெளியாகி வருகின்றன.