கூலி படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் நடிகர் ரஜினி, தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது இவர் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் லோகேஷ் – ரஜினி கூட்டணியில் ஆக்சன் கலந்த கதைக்களத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இப்படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
Arangam Adhirattume, Whistle Parakkattume!🔥💥 #CoolieIn100Days ⏳#Coolie worldwide from August 14th 😎@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/M8tqGkNIrJ
— Sun Pictures (@sunpictures) May 6, 2025

எனவே இப்படமானது 2025 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் திரைக்கு வர இன்னும் 100 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதனை அறிவிக்கும் விதமாக இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.