சிறுத்தை சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதைத் தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இருப்பினும் இவரது இயக்கத்தில் வெளியான அண்ணாத்த, கங்குவா ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா, கங்குவா 2 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி, கார்த்தி ஆகியோரிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சிறுத்தை சிவா குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சிறுத்தை சிவா, சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்த கூட்டணி புதிய படத்தில் இணைய போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்த நிலையில், இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இந்நிலையில் மீண்டும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர விநாயக் சந்திரசேகரன், சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.