spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிம்புவை பார்க்கும் போது கமல் மாதிரி இருக்கு.... நடிகை சுஹாசினி பேட்டி!

சிம்புவை பார்க்கும் போது கமல் மாதிரி இருக்கு…. நடிகை சுஹாசினி பேட்டி!

-

- Advertisement -

கமல்ஹாசனும், சிம்புவும் இணைந்து தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். சிம்புவை பார்க்கும் போது கமல் மாதிரி இருக்கு.... நடிகை சுஹாசினி பேட்டி!கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கமல், சிம்புவுடன் இணைந்து திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் 2025 ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. சிம்புவை பார்க்கும் போது கமல் மாதிரி இருக்கு.... நடிகை சுஹாசினி பேட்டி!இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது நாளை (மே 17) இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாகவும், மே 24 இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி சமீபத்தில் நடந்த பேட்டியில் தக் லைஃப் படம் குறித்து பேசி உள்ளார். சிம்புவை பார்க்கும் போது கமல் மாதிரி இருக்கு.... நடிகை சுஹாசினி பேட்டி!அதன்படி அவர், “மியூசிக் முடிந்து மிக்ஸிங் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு கமல்ஹாசனை பார்க்கும்போது சிவாஜி மாதிரியும், சிம்புவை பார்க்கும் போது இளம் வயது கமல் மாதிரியும் தோணுகிறது. இரண்டு பேருமே ஹைலைட். முதல் முறையாக மணி, இந்த படத்தில் நடிப்புக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ