நடிகர் விஷால் தான் கண்டிப்பாக லவ் மேரேஜ் தான் பண்ண போகிறேன் என்று அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஷால், ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என பலரும் கேள்விகளுக்கு வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். அதன்படி தற்போது நடிகர் சங்க கட்டிடப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் திறக்கப்பட இருக்கிறது. அதே சமயம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடிகர் விஷாலுக்கு பிறந்தநாள் வருகிறது.
இந்நிலையில் விஷால், “ஒரு மாதமாக நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும். ஆகஸ்ட் 29 என்னுடைய பிறந்தநாள் அன்று கூட திருமணம் நடைபெறலாம். எப்படினாலும் இன்னும் நான்கு மாதத்தில் என்னுடைய திருமணம் நடக்கும். கடந்த ஒரு மாதமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். கண்டிப்பா காதல் திருமணம் தான். ஆனால் அவங்க பெயர் என்னன்னு சொல்ல மாட்டேன். அவர் சினிமாவை சார்ந்தவரா? இல்லையா என்பதும் சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார். இது விஷால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.