யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகி பாபு மண்டேலா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தர அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு. அதே சமயம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி வருகின்றமே 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்திலும் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் யோகி பாபு. இந்நிலையில் யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இயக்குனர் ஜெய் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தினை ரூக்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் யோகி பாபுவுடன் இணைந்து மேகா தாமஸ், ஜாசிக், மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.