இயக்குனர் மணிரத்னம், நடிகை திரிஷா குறித்து பேசியுள்ளார்.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் இவர், தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றார். தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார் திரிஷா. கமல்ஹாசன் – சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திரிஷாவின் கேரக்டர் காட்டப்பட்டிருந்தது.
#ThugLife – #AshokSelvan is a scene where Kamal sir gets to act opposite him in the first scene of the Vachu Suit. That’s what makes him confident.
– The reason for casting him was because someone of this age was needed.
pic.twitter.com/6iAlif7hWe— Movie Tamil (@MovieTamil4) May 21, 2025

அதாவது தக் லைஃப் படத்தில் திரிஷா, சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர், கமல்ஹாசனின் கள்ளக்காதலியாக காட்டப்பட்டிருந்தார். இந்நிலையில் மணிரத்னம், தக் லைஃப் படத்தில் திரிஷாவின் கேரக்டர் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “இந்த படத்தில் திரிஷாவின் கேரக்டர், அப்படியே குந்தவை கேரக்டருக்கு எதிர்மறையானதாக இருக்கும். அவர் என்னுடைய அலுவலகத்திற்கு வந்த போது, நான் அவரிடம் இதை சொல்லி, இந்த கேரக்டரை பண்ணுவீங்களா? என்று கேட்டேன். அவர் அதற்கு தயாராக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.