மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் திரிஷாவின் கேரக்டர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இந்த படத்தில் கமலுக்கு மனைவியாக அபிராமி நடிக்க கள்ளக்காதலியாக திரிஷா நடித்துள்ளார். கமலின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்திருக்கிறார். கமல் – அபிராமி இருவரும் இணைந்து ஏற்கனவே விருமாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இந்நிலையில் டிரைலரில் கமல்- அபிராமியின் முத்தக்காட்சி ஒன்று காட்டப்பட்டிருந்தது. இது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. ஏனென்றால் திரிஷா மட்டுமில்லாமல் அபிராமிக்கும் – கமல்ஹாசனுக்கும் இடையில் கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் இருக்கிறது. எனவே இருவருடனும் கமல் நெருக்கமான காட்சிகளில் இருப்பது போன்று ட்ரெய்லரில் காட்டப்பட்டிருந்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை அபிராமி இதுகுறித்து தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதன்படி அவர், “அது 3 வினாடி கிஸ் சீன் தான். அது ட்ரெய்லரில் இடம் பெற்றதுதான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த காட்சிக்கு அது தேவையானது தான். அதை படத்தில் பார்க்கும்போது தெரியும். ஆனால் அதைப்பற்றி இவ்வளவு பெரிதாக பேசுவது அவசியம் இல்லாதது. வேறு எந்த நடிகரும் முத்தக் காட்சியில் நடித்தது இல்லையா? உச்ச நடிகர் ஒருவர் நடித்தால் மட்டும் மக்கள் அதைப்பற்றி பேச தொடங்குகிறார்கள். இப்போது இதெல்லாம் சாதாரணமாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -