spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபோதும் சார் போதும்.... பழைய விஷயத்தை பேசிய கமல்.... நானி கொடுத்த பதில்!

போதும் சார் போதும்…. பழைய விஷயத்தை பேசிய கமல்…. நானி கொடுத்த பதில்!

-

- Advertisement -

இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்திருக்கிறார்.போதும் சார் போதும்.... பழைய விஷயத்தை பேசிய கமல்.... நானி கொடுத்த பதில்! இந்த படம் வருகின்ற ஜூன் 5-ம் தேதி திரைக்க வர இருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் நானி குறித்து பேசி உள்ளார்.போதும் சார் போதும்.... பழைய விஷயத்தை பேசிய கமல்.... நானி கொடுத்த பதில்!

அதாவது நானி பழைய பேட்டி ஒன்றில், “எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. விருமாண்டி படத்தில் நீதிமன்ற காட்சியில் கமல்ஹாசன் தூங்கிக் கொண்டிருப்பார். தூக்கத்தில் இருந்து அவர்களும் போது மீசையை சரி செய்து, வறண்டு போன வாயை சரி செய்வார். சினிமாவில் பல பேர் தூக்கத்திலிருந்து எழுதுவது போல் நடிக்கிறார்கள். ஆனால் யாரும் அவரைப் போல் நடித்ததில்லை. அவர் நடிக்கிறாரா என்று கூட சொல்ல முடியவில்லை” என்று பேசியிருந்தார்.

we-r-hiring

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய கமல்ஹாசனிடம் தொகுப்பாளர் நானியின் பெயரை குறிப்பிடாமல் கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன், “நானி என்று அவருடைய பெயரை குறிப்பிட்டு சொன்னார். அவருடைய பெயரை நான் சொன்னதற்கு காரணம் நான் நானிக்கு நன்றி சொல்லத் தேவையில்லை அவருடைய பெயரை சொன்னாலே போதும்” என்று கூறினார். இதற்கு நானி தனது எக்ஸ் தல பக்கத்தில், “போதும் சார் போதும்” என்று பதிவிட்டு ஹார்ட் குறியீடையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ