spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'முத்த மழை' பாடலுக்கு கிடைத்த வரவேற்பு.... தீ-யிடம் மன்னிப்பு கேட்ட சின்மயி... காரணம் என்ன?

‘முத்த மழை’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு…. தீ-யிடம் மன்னிப்பு கேட்ட சின்மயி… காரணம் என்ன?

-

- Advertisement -

இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. 'முத்த மழை' பாடலுக்கு கிடைத்த வரவேற்பு.... தீ-யிடம் மன்னிப்பு கேட்ட சின்மயி... காரணம் என்ன?கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடலை பாடகி தீ பாடி இருக்கிறார். ஆனால் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தீ கலந்து கொள்ள முடியாததால் பிற்பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் தீ – யின் குரலை விட சின்மயி குரல் இந்த பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறது என பாராட்டி வருகின்றனர். சின்மயி பாடிய இந்த பாடலை இணையத்தில் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் சின்மயி இது தொடர்பாக பாடகி தீ- யிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்படி அவர், தீ வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என்றெல்லாம் கூறுவது அவசியம் இல்லாதது. கலைஞர்களாக நாங்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளர்களாக நினைக்கவில்லை. தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் அந்த பாடலை தீ தான் பாடி இருக்க வேண்டும். 'முத்த மழை' பாடலுக்கு கிடைத்த வரவேற்பு.... தீ-யிடம் மன்னிப்பு கேட்ட சின்மயி... காரணம் என்ன?அவரால் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் நான் அந்த பாடலை பாடினேன். எனக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் 15 ஆண்டுகளில் பாடகி தீ, நூறு ஸ்ரேயா கோஷல், நூறு சின்மயி ஆகியோரை தூக்கி சாப்பிடக்கூடிய ஒரு பாடகியாக இருப்பார். தீ-க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நான் பல பயிற்சிகளை எடுத்த பிறகு தான் இந்த இடத்தில் இருக்கிறேன். ஆனால் அவர் அப்படி இல்லை. இந்த சமயத்தில் நான் தீ-யிடம் மன்னிப்பு கேட்க ஆசைப்படுகிறேன். என்னை வைத்து தீ-யின் திறமைகளை குறைவாக மதிப்பிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ